திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளுள் இரண்டாவது பெரிய பிரதேசமாக கிண்ணியா விளங்குகின்றது. ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் இங்கு பல்வேறு வளங்கள் காணப்படுகின்றன. எனினும் இவற்றில் சில பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் பல பயன்படுத்தாமலேயே இருக்கின்றன. எனவே, கிண்ணியாவில் காணப்படும் வளங்கள், அவற்றின் பயன்பாட்டுத் தன்மை என்பன குறித்து நாம் இக்கட்டுரை மூலம் விளங்கிக் கொள்வோம். மனிதவளம் கிண்ணியாவில் உள்ள வளங்களுள் மிகவும் முக்கியமானது மனித வளமாகும். இங்கு 17233 குடும்பத்தைச் சேர்ந்த 75699 பேர் வாழ்கின்றனர். இவர்களுள் 18 வயதுக்கு குறைந்தோர் 34795 பேர். 18 வயதுக்கு மேற்பட்டோர் 40904 பேர் ஆவர். ஆண்கள் 37831 பேர். பெண்கள் 37868 பேர் ஆவர். இவர்களுள் அரச உத்தியோகம் செய்வோர் ஏறத்தாழ 2000 பேர் மாத்திரமே. இவர்களுள்ளும் அதிகமானோர் ஆசிரியர்களாவர். இதனைத் தவிர பிரிமா, மிட்சுயி ஆகிய தனியார் நிறுவனங்களிலும், அரச சார்பற்ற நிறுவனங்களிலும் ஓரளவு கூடுதல் தொகையினர் தொழில் புரிகின்றனர். தொழில் இல்லாதோர் எண்ணிக்கை ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் இங்கு கூடுதலாகவே உள்ளது. இங்கு தொழில் இன்றி இருப்ப...