திருகோணமலை எண்ணெய் குதங்கள்.

இது உலகத்தில் உள்ள பெரிய எண்ணெய்  குதங்களில் ஒன்று. ஒரே இடத்தில் அதிகளவில் காணப்படுவதாலும் ,இது சர்ச்சைகுரிய பூகோள ரீதியில் அமைந்த திருகோணமலையில் இருப்பதாலும் இதன் முக்கியத்துவம் முன்னிலையில் உள்ளது.

இது பிரிட்டிஸ்காரர்களினால் இரண்டாம் உலக மஹாயுத்தபகுதியில் கட்டபட்டது. சுமார் 103 தாங்கிகள்  உள்ளன. ஒவ்வொண்றும் சுமார் 2.5 லட்சம் கிலோ லீற்றர் எண்ணெய்யை சேமிக்க கூடியது.

இதில் உள்ள ஒரு விசேட அம்சம் இதில் இரண்டு பெரிய குழாய்கள் உள்ளன. ஒண்றின் மூலமாக கடலில் இருந்து கப்பலில் வரும் எண்ணெயைஉள்வாங்கி சகல வேண்டிய  தாங்கிகளுக்கும் நிறப்பமுடியும். அதேபோல் மற்றைய குழாயின் வழியாக வேண்டிய தாங்கியிலிருந்து கப்பலுக்கோஅல்லது வேறு தேவைகளுக்கோ எண்ணெயை பெறமுடியும்.

இரண்டாம் உலக மஹா யுத்தத்தின்போது ஜப்பானின் தற்கொலை விமான தாக்குதலுக்கு உட்பட்ட இரு தாங்கிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து எரிந்தன.

அதில் ஒன்று அகற்றபட்டுவிட்டது. மற்ற ஒன்று இன்றும் பார்வைக்கு உள்ளது.

இந்த பெரும் காட்டினுள்ளே யானைகள், காட்டு பன்றி, மான், மரை, நரி, கரடி,பலவகை குரங்குகள்,மயில் ,நச்சு பாம்புகள் மற்றும் மலைபாம்புகள் போன்ற உயிரினங்கள் இன்றும் உள்ளன.

இப்போது இதன் ஆதிக்கம் இந்தியா வசம் உள்ளது. ஆனாலும் அமரிக்காவுக்கும் இதில் ஒரு கண் உள்ளது.

இது திருகோணமலையின் உட்துறைமுகத்துடன் தொடர்புடையது. இந்த துறைமுகத்தினுள் சுமார் 400 பெரிய கப்பல்களை வெளியாருக்கு தெரியாமல் ஒழித்து வைக்கமுடியும்.இந்த வசதி உலக மஹா யுத்ததின்போது பெரிதும் பயன்பட்டது.

இந்தியாவின் இருபக்கங்களில் இருக்கும் நாடுகள் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் செல்லுவதற்கு இலங்கையை சுற்றிதான் செல்லவேண்டும். அதன்போது அவற்றுக்கு தேவையான எண்ணெய், தண்னீர் மற்றும் பழுதுபார்கும் தேவைகளுக்கு இலங்கை ஒரு முக்கியமான இடமாகும்.

மேற்கூறிய காரணங்களின் அடிபடையில் இலங்கையும் திருகோணமலையின் இயற்கை துறைமுகமும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றதுடன் வல்லரசுகளின் கழுகுப்பார்வையில் ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

Comments

Popular posts from this blog

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

உலகிலேயே மிகச்சிறிய பறவை (Bee Hummingbird)