3 MP க்களுக்கும் அன்பான வேண்டு கோல்
நமது திருகோணமலை மாவட்டம் கிண்ணியா மண்ணை தேசிய ரீதியாக மூன்று MP க்களை தன்னகத்தே கொண்டுள்ள மூஸ்லீம் பிரதேசம் என்று புகழ்ந்து தள்ளும் இவ்வேளை இங்கு நடப்பது என்ன? பிரதேசத்தின் மாவட்டத்தின் திட்டமிட்ட அபிவிருத்தியை ஒன்றிணைந்து பிரித்து பகிர்ந்து செய்யாமல் யார் செய்தது யார் செய்வது என்று மார் தட்டுவதும் அதை சமூக இணையத்தலமான முகநூலில் பதிவேற்றம் செய்வது அதற்காக தாகாத வார்த்தைகளால் பின்னூட்டம் இடுவது என்ன நடக்குது நமது மண்ணில் இதையெல்லாம் வெளி மாவட்ட சகோதரர்கள் பார்த்து கை தட்டி சிரிக்கும் நிலை கண்டு மனம் நோவுகிறது கண்கள் இரத்த கண்ணீர் வடிக்கிறது
நமது மண்ணுக்கான நீதி மன்றத்தை பரி கொடுத்துள்ளோம். A.தர வைத்தியசாலையை பரிகொடுத்துள்ளோம் அரச வங்கிகளான மக்கள் வங்கி. இலங்கை வங்கிகளுக்கு சொந்த காணியோ கட்டிடமோ இல்லை பிரதேச சபை எல்லைக்குல் MOH Office கட்டுவதற்கு காணி ஒன்றை அடையாளப்படுத்த முடியாமல் உள்ளோம் வீதிகள் பல செப்பனிட வேண்டிவுள்ளது பாலங்கள் அமைக்க வேண்டிவுள்ளது அத்தோடு இன்னும் அரச கட்டிடங்கள் பெருங்குறையாகவுள்ளது கிண்ணியாவுக்கான கலாசார மண்டபம் அமைக்க வேண்டிவுள்ளது சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண்டிவுள்ளது. விவசாயத்துறையை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டிவுள்ளது கால் நடை வளர்ப்பாளர்களுக்கான சரியான மேய்ச்சல் நிலங்களை அடையாளப்படுத்த வேண்டிவுள்ளது கல்வி .சுகாதாரம். உட்கட்டமைபு. விடயங்களை மேம்படுத்வதோடு இளைஞ்சர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி ஒன்றை உருவாக்க வேண்டிவுள்ளது. இடம்பெயர்ந்தோருக்கான வீடமைத்திட்டங்கள் சரியான முறையில் முன்னெடுக்கப்படாமல் உள்ளது. தொழில் பேட்டைகள் அமைத்து தனியார்த் துறையில் இளைஞ்சர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்த வேண்டிவுள்ளது
இவ்வாறே பிரதேசத்தின் தேவைப்பாடுகளை அடிக்கி கொண்டே போகலாம் உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை நலுவவிடாது முற்போக்கு சிந்தனையோடு சிறந்த திட்டமிடலோடு மூவரின் காலத்திற்குல் பேசி கலந்தாலோசித்து செயற் திட்டங்களை இயலுமையின் அடிப்படையில் தெரிவு செய்து நிறைவு செய்து மக்களுக்கு கையளியுங்கள்
இது அறிய சந்தர்ப்பம் தொகுதி வாரி தேர்தல் ஒன்று வருமாகயிருந்தால் இவ்வாறான சந்தர்ப்பம் எமக்கு கிடைக்க வாய்ப்பிள்ளை காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுவோம் சன்டை சச்சரவு இல்லாமல் வாத பிரதி வாதங்களை இல்லாம் அழகிய கிண்ணியாவை உருவாக்குவோம் ஒன்று படுவோம் தனித்துவம் காப்போம் வாரீர் என்ற எனது அன்பான வேண்டுகோலை எனது இரத்தத்தின் இரத்தங்களான மூன்று எம்பிக்களிடம் சிறம் தாழ்த்தி கேட்டுக் கொள்கிறேன்
நன்றி : ஏ.எல். அப்துல் மஜீத்(சதாத்)
Comments
Post a Comment