கிண்ணியாவில் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் ஒருவர் பலி
கிண்ணியா பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டி மோதுண்டதில் ஒருவர் பலி மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்றதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் எம்.பியின் புதல்வரான ஹம்ஸா ( வயது -68) பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்றவர் படு காயங்களுக்குள்ளாகி கிண்ணியா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.
சம்பவத்தில் இடத்திற்கு கிண்ணியா போக்குவரத்து பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Comments
Post a Comment