திருமணம் முடித்தவர்களுக்கு மட்டும்
ஒருவன்,மற்ற பெண்களை விட தனது மனைவியை ஏன் அழகு குறைந்தவளாக காண்கின்றான்?
அறிவு ஞானமும் முதிர்ச்சியும் கொண்ட ஒரு மார்க்க மேதையிடம் ஒருவன் சென்று, தனது பிரச்சினையை இவ்வாறு முறைப்பட்டான்.
"எனது மனைவியை முதன் முதலாய் பார்த்து மயங்கிய போது,அவளை போன்ற ஒரு பெண்ணை அல்லாஹ் உலகில் படைக்கவில்லை என்பது போல் எனது பார்வை சொல்லியது...
*அவளுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட போது ,அவளை போன்ற பலரை கண்டேன்*
*அவளை திருமணம் முடித்த பின்னர் அவளை விட அழகான பலரை கண்டேன்*
_திருமணம் முடித்து சில வருடங்கள் கடந்த பின்னர்,மற்ற பெண்கள் அனைவரும் எனது மனைவியை விட இனிமையானவர்களாக எனக்கு தெரிந்தார்கள்_
ஞானி: இதனை விட கசப்பான ஒரு விடயத்தை நான் உனக்கு சொல்லட்டுமா?
அவன்: ஆம் சொல்லுங்கள்.
ஞானி:
உலகில் உள்ள பெண்கள் அனைவரையும் நீ திருமணம் முடித்தால் கூட அவர்கள் அனைவரையும் விட அழகானதாக *'வீதிகளில் தறிகெட்டு திரிகின்ற நாய்கள்' உனக்கு தென்படும்..!*
அவன்: ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள்?
ஞானி: ஏனென்றால் , பிரச்சினை உனது மனைவியிடத்தில் அல்ல....மனிதனுக்கு பேராசை மிக்க உள்ளமும் , மதி மயங்கும் பார்வையும் வழங்கப்பட்டுள்ளது.அவை அல்லாஹ் மீதான தமது வெட்க உணர்வை இழந்து விடுவது தான் பிரச்சினை.
இவ்வாறான ஒருவனின் கண்களை மண்ணறையின் மண் மாத்திரம் தான் மறைக்க முடியும்.
*தோழரே! உனது பிரச்சினை 'அல்லாஹ் ஹராமாக்கியதை விட்டும் உனது பார்வையை நீ தாழ்த்திக் கொள்வதில்லை*
*ஆரம்பத்தில் இருந்ததை போன்று,உலகிலேயே அழகான பெண்ணாக உனது மனைவியை மாற்றுவதற்கு ஒரு விடயத்தை சொல்லித் தரட்டுமா?*
அவன்: ஆம்.சொல்லுங்கள்.
ஞானி :
உனது பார்வையை தாழ்த்திக் கொள்.
அல்லாஹுதஆலா சொல்கின்றான்." நபியே நீங்கள் முஃமின்களுக்கு அவர்களுடைய பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும்,அவர்களுடைய கற்பை பேணிக்கொள்ளுமாறும் சொல்லுங்கள்.அதுவே அவர்களை தூய்மைப்படுத்தும்.அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் மிகவும் நுணுக்கமாக கண்காணித்து கொண்டிருக்கின்றான்."
நீ எதை செய்தாலும் உனது கையில் இல்லாதவற்றை தான் மிக அழகானதாகவும் ,மிக சிறந்ததாகவும் காண்பாய்.ஆனால்,அவற்றை நீ பெற்றுக் கொள்ளும் போது அவை உனது கண்களுக்கு சாதாரணமாகவே தென்படும்.
உன்னிடம் இருப்பதை பொருந்திக் கொள்..சுயநலவாதியாக இருந்துவிடாதே!
ஏனெனில்,
*உன்னை கப்ரில் கொண்டு போய் மூடும் வரைக்கும்* அழகின் பின்னாலும்,உலக இன்பங்களின் பின்னாலும் நீ அலைந்து திரிந்து கொண்டே தான் இருப்பாய்.
இவை அனைத்தையும் விட அழகான ,ரம்யமான ஒரு விடயத்தை சொல்லித் தருகின்றேன்.
அல்லாஹ்வை வணங்குவதிலும்,நல்ல காரியங்கள் செய்வதிலும் திழைத்திரு.
இதற்காகவே வாழ்ந்தவர்களை தவிர இதன் சுவையை யாரும் அறிய மாட்டார்கள்.
உனது மனைவியை உனது கண்களுக்கு அழகானதாக காட்டுமாறும்,அவளது அன்பை பெற்றுக்கொள்வதற்கு அருள்பாலிக்குமாறும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதற்கு மறந்து விடாதே.!
*********************
*பார்வையைத் தாழ்த்த*
---திருமணம் முடித்தவர்களுக்கு----
*மாத்திரம் சொல்ல உபதேசமல்ல*
Comments
Post a Comment