பஸ்ஸில் பயணித்த பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்திய இராணுவ சிப்பாய் கைது

கல்ஓயா பிரதேசத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்திய இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் நேற்று  வியாழக்கிழமை தெரிவித்தனர்.

திருகோணமலையிலுள்ள படை முகாமில் கடமையாற்றும் 38 வயதுடைய இராணுவ சிப்பாயே நேற்று  மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் பயணித்த பெண் பொலிஸ் அருகில் அமர்ந்த குறித்த இராணுவ சிப்பாய், பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

துன்புறுத்தலையடுத்து, பஸ் நேராக பொலிஸ் நிலையம் நோக்கி செலுத்தப்பட்டுள்ளதுடன் விசாரணைகளையடுத்து இராணுவ சிப்பாயை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர், இராணுவ சிப்பாயை இன்று  வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு