இத்தாலிக்கு தப்பியோடும் மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குருணாகல் வெலகெதர மைதானத்தில் நடைபெறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 வருட பூர்த்தி மாநாட்டில் மஹிந்த கலந்து கொள்ள மாட்டார் என அவருக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் மஹிந்தவின் ஆதரவாளர்களும் இந்த மாநாட்டை புறக்கணிக்கவுள்ளதாக தெரியவருகிறது.

கட்சியின் மாநாட்டை புறக்கணிக்கும் மஹிந்த சமநேரத்தில், இத்தாலிக்கான பயணத்தில் ஈடுபடவுள்ளார். இந்த மாத இறுதியில் மஹிந்த அடுத்த வெளிநாட்டு பயணம் ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது இத்தாலி விஜயத்தில் சிங்கள புலம் பெயர்ந்தவர்கள் அமைப்பொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டு எதிர்க்கட்சியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சில தொகுதி அமைப்பாளர்கள் பதவி நீக்கப்பட்டமை, தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மற்றும் பிரதமரை பாதுகாக்கும் நடவடிக்கையில் சுதந்திர கட்சி ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என கூட்டு எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கூட்டு எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் தற்போது வரையில் மாநாட்டில் கலந்துக் கொள்ளப்போவதில்லை என பகிரங்கமாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இதேவேளை மஹிந்த அன்ட் கம்பனியின் வெளிநாட்டு பயணிகளின் பின்னணியில் சில தந்திரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் முதலிட்டுள்ள பெருந்தொகை பணத்தை இலாபத்தை பெற்றுக்கொள்ளவே வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்வதாக தகவல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு