பேராதனை பிரதேச நைட் ஹோட்டலில் துப்பாக்கிசூடு
பேராதனை, பிலிமதலாவ பிரதேசத்தில் நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகி உயிரிழந்துள்ளார்.
பிலிமதலாவ பிரதேசத்தில் உள்ள பகலிரவு உணவகம் ஒன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த உணவகத்தின் உரிமையாளர் பேராதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பிலிமதலாவ, நானுஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்பதுடன், பேராதனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Comments
Post a Comment