சிறுமியை கொன்று புதைத்த 16 வயது சந்தேகநபர் கைது
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாங்கேணி காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிறுமியின் கொலை தொடர்பில் தலைமறைவாகியிருந்த இளவயது சந்தேகநபரை பொலிஸார் இன்று (09) கைது செய்துள்ளனர்.
நேற்று (08) பி.ப சடலமாக மீட்கப்பட்ட ஜெகதீஸ்வரன் அஜந்தா எனும் 6 வயது சிறுமி, துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய பின் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
சிறுமியை நேற்று காலை 10 மணியளவில் காணவில்லையென அவர்களது பெற்றோரும் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் சம்பூர் பொலிஸில் முறைப்பாடு செய்த நிலையில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டபோது காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் சடலத்தை மீட்டுள்ளனர்.
குறித்த சிறுமியின் தாய் வெளிநாடு சென்றுள்ளார் எனவும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்
Comments
Post a Comment