அன்புள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா!!

இப்பொழுது நீங்கதான் சகல மீடியாக்களிலும் பேசப்படுபவர். தமிழ் மக்களை காப்பாத்த வந்தவர் போல அட்டகாசமாக செயற்படும் உங்களிடம் சிலகேள்விகள்??
1-வாழ்நாளில் 75% வீதத்தை கொழும்பில் செலவளித்த நீங்கள், முதலமைச்சர் பதவியை TNA கட்சிக்குள் பலதலைவர்கள் கேட்டதால், வேறுவழியின்றி இறக்குமதி செய்யப்பட்டவர் தானே?
2-கடந்த 30 வருடகாலமாக வடக்கு மக்கள் அனுபவித்த சொல்லனாத் துயரங்கள்.நீங்கள் எத்தனை முறை வடக்கிற்கு சென்று மக்களுடன் சேர்ந்து அவர்களுக்காக சாத்தியரீதியில் போராடினீர்கள். குறைந்தது ஒரு ஆர்ப்பாட்டத்திலாவது முகத்தை காட்டினீர்களா?

3-உயர்நீதிமன்ற நீதிபதியாக அல்லது சட்டத்தரணியாக இருந்தபோது சிறையில் விசாரணையின்றி அடைக்கப்பட்டுள்ள அப்பாவி மக்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை மேற்கொண்டீர்கள்.ஏதாவது அரசசார்பற்ற /வெளிநாட்டு இராஜதந்திர ரீதியில் எப்போதாவது உங்கள் குரல் ஒலித்ததா?
அவசரகாலச் சட்டத்தால் அநியாயமாக அடைக்கப்பட்ட வடகிழக்கு இளைஞர்கள் எத்தனை நபர்களுக்காக வாதாடினீர்கள்.துணிச்சலாக தீரப்பு வழங்கினீர்கள்???

4-கொழும்பில் ஆங்கிலத்தையும் சிங்களத்தையும் பேசிக் கொண்டே குளிரூட்டப்பட்ட மாடிவீட்டில் இருந்தீர்கள். நீங்கள்  தமிழ்பேசுவதற்கு ஆரம்பித்ததே முதலமைச்சராக வந்த பிறகுதானே?

5-நீண்டகால யுத்தத்திற்கு பிறகு வடக்கு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்.நீங்கள் போடும் சாள்வைக்காக இனவாதத்தை மீண்டும் தூபமிடுவது ஏற்கமுடியுமா? ஏதேனும் பிரச்சனை வந்தால் கொழும்புக்கு ஓடிவந்துவிடுவீர்கள்.

6-தமிழ்-முஸ்லீம் உறவுகள் பற்றி உங்களுக்கு என்ன தெறியும்.இந்த இரண்டு இனங்களின் நீண்ட வரலாற்றப் பயணத்தில் நீங்கள் கண்ணாடி வீட்டுக்குள் இருந்த பார்வையாளர்.சிங்கள மக்களுடன் திருமண ஒப்பந்தம்,வியாபாரம்,கூத்தாட்டம் என்று வாழ்நாளை செலவிட்டீர்கள்.உங்கள் சம்மந்தி வாசுதேவநாணயக்கார தானே?

7-இன ஐக்கியத்தையும்,உரிமையையும் பேசும் நீங்கள் கொழும்பில் ஒரு பத்திரிகை மாநாடு நடாத்தி வீரத்தை காட்டலாமே?

8-தமிழ்தேசிய கூட்டமைப்பின் முதுவால் முதலமைச்சரானவர்.இன்று வெளிநாட்டு சக்திகளின் அடிவருடியாகி விட்டீர்கள். TNAஜ ஒதுக்கி பதவிமோகம் பிடித்து கண்மூடித்தனமாக அறிக்கை விடுகிறீர்கள்.முதலமைச்சர் பதவியை விட பிரதமர் பதவி எடுக்கலாம் என்ற கனவு காண்கிறீர்கள்?

9-கிழக்கு மாகாணத்தை பேச மட்டுமல்ல நினைக்கவே அறுகதையற்றவர்.வடக்கில் மக்களுக்கு ஓராயிரம் தேவைகள் உள்ளது.முதல்ல உங்கள் பதவியை மக்களுக்கு உரிய முறையில் நிறைவேற்றுங்கள்.

விடுமுறைக்கு போனவர் முதலமைச்சர் ஆனது உங்க கதை.அப்பாவி வடக்கு மக்களின் நொந்து கிடக்கின்ற மனசில் உணர்ச்சி பூர்வமாக விசத்தை வளர்க்க வேண்டாம். துரதிஸ்டவசமாக முறிந்துபோன தமிழ் முஸ்லீம் உறவுகளை உங்கள் சுயவிளம்பரத்துக்காக விலைபேச வேண்டாம்.

குறிப்பு:பிள்ளையான்,தயாமாஸ்டர் பட்டியலில் நீங்கள் ????

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு