உங்கள் வாழ்த்துக்களை வைத்து என்ன செய்ய?

அண்மையில் கிண்ணியாவில் நடைபெற்ற All Island School Cricket போட்டியில் நமது கிண்ணியா மத்திய கல்லூரி மாணவர்கள் தேசிய சம்பியன்களாக முடி சூடிக்கொண்டார்கள். சந்தோஷம்!!

ஆனாலும், ஒரு பெரிய கவலை!

நமது மாணவர்கள் அணிந்து விளையாடிய ஜேர்ஸியை யாராவது கவனித்தீர்களா? கலந்து கொண்ட எல்லா பாடசாலை மாணவர்களது ஜேர்ஸியையும் விட மிக மோசமான நிலையில் இருந்தது நமது மாணவர்களுடையதே.

வெற்றி பெற்றவுடன் முண்டியடித்துக் கொண்டு வாழ்த்து சொன்ன பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர், முன்னாள் மா. சபை உறுப்பினர், கிண்ணியா நகரசபை முன்னாள் தவிசாளர் ஆகிய எல்லோரும் ஆளுக்கு 10,000 ரூபா வழங்கினாலே போதும், நல்ல ஜேர்ஸிகள் வாங்கலாம்.

அதை விடுத்து, ட்விட்டர்கள் (Twitter) மூலம் நீங்கள் வழங்கும் வாழ்த்துக்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?

பெருநாட்கள் வந்துவிட்டால், யாரேனும் ஏதேனும் போட்டிகளில் வென்றுவிட்டால் போதும், வாழ்த்து சொல்ல கிளம்பிவிடுவீர்கள். சும்மா வாயால் வடை சுடும் விளையாட்டுக்களை விட்டுவிட்டு, எதையாவது உருப்படியாக செய்து காட்டுங்கள்.

நீங்கள் ஆளுக்கு 10,000 ரூபாய் தரத் தயார் என்றால் நானும் என் பங்காக 10,000 ரூபாய் தரத் தயாராயிருக்கிறேன் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

நன்றி நாஸிக் மஜீத்

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு