கிண்ணியா தள வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்காக அங்கீகாரம் வழங்கியது கிழக்கு மாகாண சபை

கிண்ணியா, மூதூர் தள வைத்தியசாலைகளை தரமுயர்த்துவதற்கான அங்கீகாரம் வழங்கியது கிழக்கு மாகாண சபை

கிண்ணியா, மூதூர் தள வைத்தியசாலைகளை B தரத்திலிருந்து A தரத்திற்கு தரமுயர்த்துவதற்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ A.L.M. நஸீர் அவர்கள், கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கு கிழக்கு மாகாண அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன் பிரதியானது கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம், இது விடயமாக மத்திய சுகாதார அமைச்சின் அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்ளுமாறு பிரதம செயலாளர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரைப் பணித்துள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எஸ். தௌபீக் தெரிவித்தார்.

நாஸிக் மஜீத்

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு