ஏறாவூர் படுகொலையில் திடீர் திருப்பம் பாலியல் வன்முறையின் பின் கொலை!!!

>மறைக்கப்பட்ட "ரேப்" ??
>தடயங்களை மறைக்க லஞ்சம் பெற்ற வைத்தியசாலை ஊழியர்??
>குற்றமற்ற கணவன்??
>குற்றமற்ற கணவனின் தம்பி??

கடந்த 11.09.2016 அன்று ஏறாவூர் முகாந்திரம் வீதியில் 32 ஜெனீரா பானூ மற்றும் 56 வயதுடைய அவரது தாய் உஷைரா இருவரும் பொல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது!

கொலையுடன் கணவனுக்கு அல்லது கணவனின் தம்பிக்கு தொடர்பிருக்கலாமென திடமாக நம்பப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட "ஏஜென்சி" "பிலால்" மற்றும் "சப்ரின்" இருவரின் வாக்குமூலத்தில் ஆச்சரியமான பல உண்மைகள் வெளிவந்த நிலையில் உள்ளது!

கொலையாளிகளின் ஒட்டுமொத்த கைதுக்கும் மிக  பிரதானமாக அமைந்த CCTV பதிவில் அகப்பட்ட "வசம்பு" என்னும் நபர்!

இவன் ஏஜென்சி "பிலாலின்" வாகன ட்ரைவர் (பேர்சனல்கோளையா)

வசம்பு ஏற்கனவே கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஓட்டமாவடியை சேர்ந்த "மபாஸ்" மற்றும் ஏறாவூரை சேர்ந்த பாஹிம்,ராஸிம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்!

பின்னர் வசம்பு என்பவன் கொடுத்த இரண்டாவது வாக்குமூலத்தில் கொலைக்கு காரணம் பிலால் மற்றும்
சப்ரின் உடன் தன்னையும் சேர்த்து 3 பேர் மாத்திரம்தான் என்று கூறியிருந்தான்!

அதன் மூலம் பிலால் மற்றும் சப்ரினிடம் வாக்குமூலம் பெறப்பட்டதில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியானாது!

கொலை செய்யப்பட்ட இரவு இந்த மூன்று பேரும் வாகனமொன்றில் சென்று ஏறாவூர் ஆற்றங்கரை பகுதியில் உள்ள காணியொன்றினுள் மது அருந்தியுள்ளனர்!

அதிகாலை நேரம் ஒருமணியளவில் வசம்பு என்பவன் "தாதா" ஏஜென்சி பிலாலின் கட்டளைக்கு அமைவாக மோட்டார் சைக்கிள் ஒன்றை எடுத்துக்கொண்டு முகாந்திரம் வீதிக்கு வந்து 4 தடவைகள் நோட்டமிட்டு ஆள் நடமாட்டம் எதுவுமில்லை என்பதை உறுதிப்படுத்தி கொண்டு ஆற்றங்கரைக்கு சென்றுள்ளான்!

பின்னர் மூவரும் வாகனத்தையும் பைக்கையும் ஆற்றங்கரையில் போட்டுவிட்டு நடைபவனியாக கமெறா பொருத்தப்படாத வீதியால் வந்து பெண்ணின் வீட்டுக்கு பின்பக்கமாக மதில்மேல் பாய்ந்து உள்ளே வந்து இறங்கியிருக்கின்றனர்!

உள்ளே சென்று முதலில் பெண்ணின் தாயை அடித்து கொலை செய்தபின் "ஜெனீரா பானுவை" சப்ரின் என்பவன் மடக்கிபிடிக்க "பிலால்" எனும் மிருகம் வேட்டையாடியது!

பின்னர் சகாக்களையும் வேட்டையாடுமாறு கூறியிருக்கிறான்!

பின்னர் பெண்ணிடம் இருந்த நகைகளை எல்லாம் சப்ரின் பக்குவமாக "பெக்" செய்தபின் "தாதா" பிலாலின் கட்டளைக்கு ஏற்ப வசம்பும்,சப்ரினும்
ஜெனீரா பானுவின் தலையில் உயிர்போகும் வரை கொடூரமாக தாக்கியிருக்கிறார்கள்!

ரத்த வெள்ளத்தில் ஜெனீரா பானு மயங்கி கிடக்க வந்த வழியால் மிக பக்குவமாக மூவரும் வெளியேறி சென்றுள்ளனர்.

காலை ஏழு மணியளவிலேயே ஜெனீராபானுவின் உயிர் முழுமையா பிரிந்திருக்கிறது என்றும் அக்கம்பக்கத்தாரின் அலட்சியம் காரணமாகவே ஒரு உயிரையேனும் காப்பாற்ற முடியாமல் போனதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன!

இதேவேளை மேற்படி படுகொலைக்கான தடயங்கள் அனைத்தையும் மறைப்பதற்கு "பிலால்" மட்டக்களப்பிற்கு சென்று லட்சக்கணக்கில் லஞ்சம் வழங்கியுள்ளதாகவும் அது தொடர்பிலும் மறைக்கப்பட்ட "ரேப்" விவகாரம் தொடர்பிலும் கடுமையான விசாரணைகள் முன்னெடுக்க படுவதாகவும் அறியக்கிடைக்கிறது!

ஊரை உலுக்கிய இந்த கொலை சம்பவத்தில் பெண்ணின் கணவனுக்கோ அல்லது கணவனின் சகோதரனுக்கோ எவ்வித தொடர்புகளும் இல்லை என்றே இதுவரையான தகவல்கள் தெரிவிக்கின்றன!

ஊர்மக்கள் கணவன் மீது சந்தேகம்  கொள்வதற்கு சிலகாரணங்களும் இருக்கத்தான் செய்தன!

அவற்றையும் மேலும் பல தகவல்களையும் எதிர்பாருங்கள்

விசாரணைகளை மிக திறன்பட நடாத்திவரும் ஏறாவூர் பொலிசாருக்கு பல கோடி நன்றிகள்!

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு