கிண்ணியாவில் கோர வீதி விபத்து பலர் பலி
#கிண்ணியாவில்_கோர_வீதி_விபத்து... #பலர்_பலி... #இவ்வாறான_செய்திகளை_காதுக்கெட்டுவதை_தவிர்ப்போம்... கிண்ணியா பாலம் தொட்டு கச்சக்கொடித்தீவு வரையிலான பிரதான வீதியானது இயல்பாக சன நெரிசல் கொண்ட வீதியாகளாகும். இப்பிரதான வீதிகளில் சரியான சட்டங்கள் பேணப்படாததால் அண்மைக் காலங்களில் சில அகோர நிகழ்வுகள் நிகழ்ந்தவை நாம் யாவும் அறிந்தனவே. இவ் வீதியில் அதிவேகத்தில் பயணிக்கும் சாரதிகளின் கண்ககளுக்கு எட்டாத வகையில் சில பலகைகள் இடப்பட்டுள்ளனவும் ஒரு காரணமாக கருதலாம். எனவே இவ்வாறான அதி வேக பயணத்தை கட்டுப்படுத்தி விபத்துக்களையும் , விபரீதங்களையும் குறைப்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சில யோசனைகளை முன் வைக்கிறேன். * சன நெரிசல் கூடிய இடங்களில் வேகத் தடைகள் அமைத்தல் (Speed Breaker) * உரிய இடத்திற்கான வேக அளவுப் பலகைகளை சாரதிகளின் பார்வைக்கு எட்டும் வகையில் அமைத்தல்.(Speed limit Board) (Padestrian Cross must be shown clearly) * வீதி விளக்குகள் பொருத்துதல் (உதாரணமாக குட்டிக்கராச்சி தொடக்கம் சூரங்கல் வரையான் பாதை) * வீதி விதிமுறைகளைப் பேணுவது பற்றிய விழிப்புணர்வுகளை ஊட்டல். இது போன்ற தாங்களின் சிறப்பான் யோசனைகளையும் முன்னெடுக்க எம்மால் ஆன ஆதரவை வழக்ங்குவோம்
நன்றி நஸீம்
Comments
Post a Comment