தோப்பூரில் விபத்து ஸ்தளத்திலயே இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் செல்வநகர் பகுதியில் ரிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் ஸ்தலத்தில் பரிதாபமாக உயிரிளந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று 25 பகல் 11.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று சிறுவர்கள் பயணித்ததில் இருவர் உயிர் இழந்துள்ளதுடன் ஒருவர் தப்பித்துள்ளதோடு தப்பித்த சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தின் போது உயிர் இழந்தவவர்கள் பீ.சியாம் (15) ,ஏ.நிப்றாஸ் (15) என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிர் இழந்த இரு சிறுவர்களினதும் ஜனாஸா மூதூர் தள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு