G20 மாநாட்டின் முடிவில் அர்துகான் ஆற்றிய உரையின் சுருக்கமான குறிப்புக்கள்.
• சிரியா விடயம் இன்னுமே மனித குலத்தின் இரத்தம் வடிந்துகொண்டிருக்கின்ற காயமாக இருந்துகொண்டிருக்கின்றது.
• ஆறு இலட்சம் பொதுமக்களைக் கொன்று குவித்த அஸத், தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதைத் தீர்வாக முன்வைப்பவர்களைப் பார்க்கும் போது மானுடத்தின் பெயரால் வெட்கப்படுகின்றேன்.
• மேற்கின் இனவாதப் பாகுபாடும் இரட்டை வேடமும் முகம்சுளிக்கச் செய்கின்றது.
• ஜூலை பதினைந்தாம் திகதி துருக்கியில் இடம்பெற்ற சதிமுயற்சி பயங்கரவாதத்தின் புதியதொரு முகமாகும்.
• என்ன விலை கொடுத்தாலும், தன்னந்தனியாகத் தான் நின்றாலும் அனைத்து விதமான தீவிரவாதங்களுக்கும் எதிரான எமது போராட்டம் தொடரும். இதை யாராலும் தடுக்க முடியாது. துருக்கி பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களிலிருந்து மீளும் வரை எமது நடவடிக்கைகள் நீடிக்கும். இதன் முதற்கட்டமாக எமது எல்லைகளிலிருந்து தாஇஷைத் துப்புறவுப்படுத்தி விட்டோம்.
• உலகின் ஒரு பக்கத்தில் பட்டினியும் வறுமையும் அழுத்தங்களும் அக்கிரமங்களும் தீவிரவாதமும் தாண்டவமாடுகின்ற போது இன்னுமொரு பக்கத்தில் இவற்றை ரசித்துக்கொண்டு நிம்மதியாக வாழ்கின்ற ஓர் உலகத்தை என்னால் கற்பனையும் செய்ய முடியாதுள்ளது. எல்லோரும் உலகம் என்ற ஒரே கப்பலில் பயணிக்கின்றோம் எனில், இந்தக் கப்பலின் பாதுகாப்பு அனைவரதும் கூட்டுப் பொறுப்பாகும்.
• பூகோலப் பிரச்சினைகளை சமநிலைவாத அடிப்படைகளைக்கொண்டல்ல, நீதியின் அடிப்படைகளைக்கொண்டு தீர்ப்பது கட்டாயமாகும்.
• சிரியா அகதிகள் விடயத்தில் இங்குள்ள எந்தவொரு நாடும் எந்தவோர் ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களையும் செய்யவில்லை. பாதுகாப்பு வலயம் ஒன்றை ஏற்படுத்துவோம் என்ற எமது முன்மொழிவுகள் அனைத்தும் சாமான்யமான சாட்டுப்போக்குகளைக்கொண்டு காலம்கடத்தப்பட்டன. இந்தப் பரீட்சையில் அனைத்து நாடுகளும் தோல்வியடைந்து விட்டன.
Comments
Post a Comment