சட்ட விரோத மண் அகழ்வு கிண்ணியாவில் 6 பேர் கைது
திருகோணமலை கிண்ணியா பகுதியில் மகாவலி கங்கையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது 6 லொறிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
மகாவலி ஆற்றில் அகழும் மணலை சட்டவிரேதமாக இவர்கள் ஏற்றிசெல்வதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை மேலும் தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Comments
Post a Comment