பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்களின் சொத்து , யூதர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை
முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான பைத்துல் முகத்தஸ் மற்றும் பழைய ஜெருசலம் நகரைச் சூழவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பூமியை முஸ்லிம்களின் தனி உரிமை என்றும் அவைகள் இஸ்லாமியர்களின் பொது சொத்து என்றும் அந்த திருதலத்திற்கும் யூதர்களுக்கும் மத அடைப்படையிலோ வரலாற்று அடிப்படையிலோ எந்த தொடர்ப்பும் இல்லை என்றும் யுனஸ்கோ நிறுவனம் 13-10-2016 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற மாநாட்டில் பிரகடனம் செய்தது.
முஸ்லிம்களின் மூன்றாவது புனிதலம் பற்றியும் அதற்கும் யூதர்களுக்கும் மத அடிப்படையிலும் வரலாற்று அடிப்படையிலும் எந்த தொடர்ப்பும் இல்லை என்ற யுனிஸ்கோவின் முடிவு உறுப்பு நாடுகளுக்கிடையே வாக்கெடுப்பிற்கு வந்தது.
இந்த தீர்மானத்தை தோற்கடிக்க இஸ்றேல் கடும் முயற்சிகளை மேற்கொண்டது. இஸ்ரேலின் எதிர்ப்பு முயற்சிகளை முறியடித்து தீர்மானம் வெற்றி பெற்றது.
58 உறுப்பு நாடுகளில் 26 நாடுகள் தீர்மானத்தில் இருந்து விலகி கொள்ள 26 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தும் United States, Britain, Germany, the Netherlands, Lithuania Estonia உள்ளிட்ட 6 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்தும் வாக்களித்தன.
இதனை தொடர்ந்து பைத்துல் முகத்தஸ் திருதலத்திற்கும் யூதர்களுக்கும் மத அடைப்படையிலோ வரலாற்று அடிப்படையிலோ எந்த தொடர்ப்பும் இல்லை என்ற தீர்மானம் வெற்றி கண்டது.
வாக்கெடுப்பில் இருந்து தவிர்ந்துகொண்ட 26 நாடுகளில் இலங்கையும் அடங்கும் .
யுனிஸ்கோ என்பது ஐநாவின் தலைமையில் இயங்கும் ஒரு கலாச்சார பண்பாட்டு நிறுவனமாகும் இதில் 58 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
Comments
Post a Comment