கிண்ணியாவில் கலைகட்டிய ஆசிரியர் தினம் !
சமூகத்தின் முதுகெலும்பான ஆசிரியர்களை தலைமீது ஏற்றி மதித்து உலகமே விழாப்பூணும் இந்நந்நாளிலே என்னையும் என் குழந்தைகளையும் ஆழாக்கிக் கொண்டிருக்கும் ஆசான்களுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்தைத் தெரிவிக்கின்றேன்.
இன்பத்திலும் துன்பத்திலும் துவண்டுவிடாமல் தமது கடமைக்கு மேலாகவும் உழைக்கும் ஆசிரியர்களை நான் இவ்வேளையில் ஆனந்த்த்துடன் நினைவுகூறுகிறேன். குறைந்த பட்ச கடமையைக் கூட செய்யாதிருக்கும் ஆசிருயர்களுக்காக " அவர்களுக்கு அள்ளாஹ் பொறுப்புகளின் பாரத்தை உணரச்செய்து நல்ல உள்ளத்தை வழங்குவானாக" என பிரார்த்திக்கிறேன்.
இந்த இனிய தருனத்திலே தேசிய விருதுபெற்ற ஆசிருயர்களை வாழத்துகிறேன்.
கிண்ணியாவின் ஆசிரிய முன்னோடி, கல்வித் தந்தை ஆசிரிய ஜோதி முருகுப்பிள்ளை வாத்தியார், மற்றும் திருமதி பெரியதம்பி போன்றவர்களை எனது ஊர் சார்பாக நன்றியுடன் நினைவுகூறுகிறேன்.
கிண்ணியாவில் வாழ்ந்து மறைந்த, ஓய்வுபெற்று வாழ்ந்துகொண்டிருக்கின்ற தமது கடமையை சரியாக செய்த ஆசிரிய தியாகிகள் அனைவரையும் அள்ளாஹ் பொருந்திக்கொள்வானாக ! மேலான சுவனபதியை வழங்குவானாக! அவர்களது பரம்பரையை வறுமை, மடமையிலிருந்து காப்பாற்றுவானாக !
நன்றி இக்ரிமா அல்மக்தூம்
Comments
Post a Comment