கிண்ணியாவில் வரவேற்பு கோபுரம் அமைந்தால் பௌத்த கலாச்சாரத்திற்கு என்ன? பாதிப்பு  ????

உண்மையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் நாலா பக்கமும் கடலால் சூழப்பட்டு  இயற்கையின் அரவணைப்பால் பூத்துக் குலுங்கும் கிண்ணியாவிற்கு மேலும் அழகு சேர்ப்பதற்காக முன்னால் நகர மேயர் Dr. ஹில்மி மஹ்ரூப் அவர்களின் அழகிய நகரம் கிண்ணியா என்ற கருப் பொருளில் உருவானது தான் இந்த வரவேற்பு கோபுரம்

இக்கோபுரத்திற்கான அடிக்கல் எப்போது நாட்டப்பட்டதோ ! அப்போதிருந்தே! பிரச்சனைகளும் தடைகளும் இன்று வரை ஏற்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது நீண்ட இடைவெளிக்குப் பின் சில மாற்றங்களுடன் தற்போது அரசாங்க அதிபரின் அனுமதியுடன் வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின் பல தடைகளும் பிரச்சனைகளும் இதில் முக்கியமாக இந்த பௌத்த பிக்குக்களின் ஊடுறுவல் மேலும் கவலையை ஏற்படுத்துகின்றது

அன்று சொன்னான் மறைந்த மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத் "சேருவில சிங்களவர்களுக்கு கலாச்சாரமென்றால். கோணஸ்வரம் தமிழர்களுக்கு கலாச்சாரமென்றால் கிழக்கு முஸஸ்லீம்களுக்கு கிண்ணியா கலாச்சார மைய்யமாகுமென்று "  என்று தனது தூய தமிழில் வீரத்தோடு சூழுரைத்தான், ஆனால்  இன்று நடப்பது  என்ன? எங்களுடைய மண்ணில் எங்கள் கலாசாரத்தை பயன்டுத்தி வரவேற்பு கட்டிடத்தை அமைக்க இந்த நல்லாட்சியிலும் தடையென்றால் இத்தடையை உடைத்தெரிய ஏன்?  அரசியல் வாதிகள் பொது மக்கள் அணைவரும் ஒன்றுபட்டு பௌத்த கலலாச்சாரத்திற்கு என்ன?  பாதிப்பு என்ற கேள்வியை தொடுத்து அகிம்சையாய்  அதற்கும்... பதில் கிடைக்காவிட்டால் மக்கள் போரிட்டமாய்  மாற்றி நின்று இதற்கான முடிவை  பெற முடியாது

இது Dr. ஹில்மி என்பவரது பிரச்சனையல்ல ஒட்டு மொத்த கிண்ணியாவின் முஸ்லீம் சமூகத்தின் பிரச்சனையாகும் .வாழைமடு வயற்காணிகள் சிங்கள பௌத்தர்களால் சூரையாடப்பட்டு   அதனை பெறமுடியாத சூழலில் படிப்படியாக வானாறு. பனிச்சங் குளம் சுன்டியாறு. குரங்குபாஞ்சான். இரட்டைக் குளம். செம்பி மோட்டை .சாவாறு .கல்லறப்பு .போன்ற நமது பூர்வீக வயற்  காணிகளுக்கும் அத்து மீறி ஆக்கிரமைப்பு செய்வதற்கான முஸ்தீபுகளை இந்த பௌத்த பிக்குகளும் அவர்கள் சார்ந்த அமைப்புக்களும் மேற் கொள்வதோடு கூடுதலான விலை கொடுத்து வாங்கவும் திட்டமிட்டுள்ளனர்  இவ்வேளை இதற்கு பொறுத்த நடவடிக்கைகளை அரசியல் தலைவர்களும் புத்தி ஜீவிகளும் பொது மக்களும் இணைந்து உடன் எடுக்க வேண்டும் தாமதித்தால் பல விளைவுகளுக்கு முகங் கொடுக்க நேரிடலாம் சிந்தித்து புத்தி சாதுரியமாக செயற் படுவோம் ஒன்று படுவோம் தனித்துவ காப்போம் வாரீர்

நன்றி சதாத் மஐீத்

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு