இலங்கையர்களுக்கு மலேசியாவில் வேலை வாய்ப்பு டிக்கெட் இலவசம்!!!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்பு முகவர் நிலையம் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையில் மிகவும் பாதுகாப்பாக அதிக சம்பளத்துடன் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் பல நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்து நமது நாட்டவர்களை தொழில் செய்வதற்கு வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் தலைவர் லக்ஷமன் அபேகுணரத்ன தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய தலைவல் லக்ஷமன் அபேகுணரத்ன 4 ஆயிரம் பேரை மலேசியாவுக்கு அனுப்ப அண்மையில் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளோம் விருப்பமானவர்கள் அனைவரும் எமது வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையத்துடன் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களைப் பெற்று நேர்முகப் பரீட்சை ஒன்றின் மூலம் மலேசியாவுக்குச் செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.
இவ்வாறு செல்ல விரும்புபவர்களுக்கு பதிவுக்கட்டணமாக 17 ஆயிரம் ரூபாவும், மருத்துவப் பரிசோதனைக்காக 12 ஆயிரத்து 500 ரூபாவும், நிருவாகச் செலவுகளுக்காக 15 ஆயிரம் ரூபாவும் என சுமார் 40 ஆயிரம் ரூபா மட்டும் செலவாகும் எனவும் தெரிவித்தார். அவர்களுக்கான விமானப் பயணச் சீட்டுக்கள் இலவசமாக வழங்கப்படும். இவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் இம்மாதம் 16, 17, 18 ஆம் திகதிகளில் கொழும்பு, நாவல, நாரஹேன்பிட்டி வீதி, இலக்கம் 12இல் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் தலைமையகத்தில் நடைபெறும்.
இதேபோன்று சிங்கப்பூர், குவைத், பாகிஸ்தான், ஓமான், பஹ்ரைன், சைப்ரஸ், அபூதாபி, கட்டார்,சீசெல்ஸ் தீவு,எதியோப்பியா,முருஸி தீவு உள்ளடங்கலாக உலக நாடுகள் பலவற்றுக்கும் வேலைவாய்ப்புக்காக அனுப்ப முடியும் எனவும் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் பிள்ளை பராமரிப்பு உதவியாளர்கள், பணிப்பெண்கள், குவைத்தில் சாரதிகள், தாதி உத்தியோகத்தர்களும், ஓமானில் ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், சமையற்காரர்கள், பஹ்ரைனில் தச்சன், மின்சார உபகரணங்கள் பழுதுபார்ப்பவர்கள், சாரதிகள், எதியோப்பியாவில் லண்டன் நிறுவனமொன்றின் கைத்தொழில் பேட்டையில் பணியாளர்கள், பாகிஸ்தானில் பாடசாலைகளில் கணிதம், பௌதீகவியல், இரசாயனவியல், உயிரியல், வர்த்தகம், பொருளியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் போன்ற தொழில்துறைகள் காணப்படுகின்றன.
மேற்குறித்த ஆசிரியர்களுக்கு 5 வருட அனுபவம் இருப்பின், இலங்கை நாணயம் மாதாந்தம் 1 இலட்சத்து 50 ஆயிரம் சம்பளத்துடன் தங்குமிடம், மருத்துவம், உணவு முதலியவைகள் இலவசமாக வழங்கப்படும்.
இது குறித்த மேலதிக விபரங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் இணையதளமான றறற.ளடகநய.டமஇல் பார்வையிட்டு அதில் விண்ணப்பங்களை பெற்று நிரப்பி விண்ணப்பங்களை மேலே குறிப்பிட்ட நேர்முக பரீட்சை நடை பெறும் முகவரிக்கு அனுப்பி வைக்கமுடியும் அல்லது 0112807400,0714541463 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.
0777 876461,077 197 8000 தொடர்பு கொண்டு மேலதிக உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும்
Comments
Post a Comment