மகன் தாக்கி தந்தை மரணம் கிண்ணியாவில் கோர சம்பவம்

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்  மகனின் தாக்குதலினால் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தந்தை  நேற்று மாலை 05 திருகோணமலை பொது வைத்தியசாலையில் உயிர் இழந்துள்ளதாக போலீஸ் தெருவித்துள்ளனர்

இவ்வாறு உயிர் இழந்தவர் கிண்ணியா ஆலங்கேணி,சமாஜந்தீவு பகுதியைசேர்ந்த அப்துல் (ரவூப் 45 வயது) எனவும்தெரியவருகிறது

சப்வம் குறித்து தெரியவருவதாவது கடந்த 09ம் மாதம் 04ம் திகதி உயரிழந்தவரின் மகனான ரவூப் முஜீப் (26 வயது) தந்தையின் தலைக்கு பொல்லால் தாக்கிய நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்

அதே நிலையில் தந்தையை தாக்கிய குற்றச்சாற்றின் பேரில் மகன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

சடலம் சட்ட வைத்திய  நிபுணரின் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பரிசோதனை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கபள்ளதாகவும் கிண்ணியா பொலிசார் தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு