மூதூர் றிஸானா போன்று மற்றுமொரு பர்ஸானா
மூதூர் றிஸானா போன்று மற்றுமொரு "பர்ஸானா"
மீட்க உதவுமாறு உறவினர்கள் அவசர வேண்டுகோள்!
குழந்தை ஒன்றை ஒன்றை கொலை செய்ய முற்பட்டதா கூறப்படும் இலங்கை பணிப்பெண் ஒருவரை கட்டார் பொலிசார் கைது செய்துள்ளனர்!
கடந்தசில தினங்களாக ஒரு வீடியோ காட்சியுடன் இலங்கை பணிப்பெண் ஒருவரை தொடர்பு படுத்திய செய்தியொன்று வெளியாகி இருந்தது!
(பொதுநலன் கருதி அதை நாம் அகற்றி விட்டோம்)
சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர்
இலங்கை திருகோணமலை பகுதியை சேர்ந்த பர்ஸானா றபாய்தீன் எனும் 24 வயது இளம் பெண் ஒருவர் குடும்பத்தின் வறுமைநிலை காரணமாக கட்டார் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றிருந்தார்!
அங்கு சென்றவர் எவ்வித பிரச்சினைகளுமில்லாமல் வேலை செய்து வீட்டாருக்கு பணம் அனுப்பி வந்துள்ளார்!
குடும்பத்தில் இவருடன் மேலும் இரு பெண் சகோதரிகள் என்பதால் குடும்பத்தை பராமரிக்க வேண்டிய பொறுப்பு இவர் மீது கடமையானது!
பெற்றோரும் சுகயீனமுற்றிருக்கும் நிலையில் சுமார் 2 மாத காலமாக ப்ரஸானாவின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது!
இயன்றவரை விசாரித்தும் பயன் எதுவும் கிடைக்காமல் பெற்றோர்கள் பதறிப்போயிருந்த நிலையில்தான் பர்ஸானாவின் புகைப்படத்துடன் ஒரு செய்தி வைரலாக பரவியது!
இதை அறிந்த உறவினர்கள் கொழும்பு சென்று விசாரித்த போது மற்றுமொரு அதிர்ச்சி காத்திருந்தது!
பர்ஸானாவை கட்டாருக்கு அனுப்பிய முகவர்கள் உரிய முறைப்படி பதிவு செய்து பர்ஸானாவை அனுப்பவில்லை!
தற்போது அந்த முகவரும் தலைமறைவாகி உள்ள நிலையில் பர்ஸானாவின் உறவினர்கள் பெரும் சங்கடத்திற்கு ஆளாகி உள்ளனர்!
ஏற்கனவே இதுபோன்றதொரு குற்றசாட்டில்தான் மூதூரை சேர்ந்த றிஸானா எனும் ஏழைப்பெண்ணும் சவுதி சட்டத்தால் பரிதாபமாக கொலை செய்யப்பட்டார்!
அதுபோன்ற துயரம் இந்தப்பெண்ணிலும் ஏற்பட்டுவிடாமல் முறையாக விசாரணை நடத்தி தங்களது பிள்ளையை உடனடியாக மீட்டுத்தருமாறு உறவினர்கள் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்!
வெளியாகி உள்ள வீடியோ காட்சிக்கும் பர்ஸானாவுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்றும் பர்ஸானா அப்படிப்பட்ட வன்குணம் கொண்டவளல்ல என்றும் உறவினர்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர்!
எது எப்படியோ ஒரு ஏழைப்பெண்ணின் உயிர்காக்க அரசியல் மற்றும் ஆன்மீக தலைவர்களும், பொது அமைப்புக்களும் மும்முரமாக களமிறங்கி செயற்படுவது சாலச்சிறந்ததும் காலத்தின் தேவையுமாகும்!
Comments
Post a Comment