கிண்ணியா கல்வி வலய ஆரம்ப கல்வியும் மக்களின் ஆதங்கமும்.

கிண்ணியா கல்வி வலய ஆரம்ப கல்வியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு இன்று பலரையும் சிந்திக்க தூண்டியுள்ளது

இது தொடர்பாக முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட்டு தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட வேண்டும் .

தீர்வுகளை நோக்கி நகரும் முன்னர் உண்மையான பிரச்சினைகள் என்ன ? என்பதை இனங்காண வேண்டும்.

இதில் அலுவலர்கள்அரசியல் சமூக தலைமைகள்  ,அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,கல்விசார் சமூகத்தினர் ,சிறுவர் உளவள ஆலோசகர்கள் போன்ற பலரும் ஒன்றாக அமர்ந்து உண்மையாக பிரச்சினைகளை ஆராய வேண்டும்.
         
போலியான தரவுகள் ,செயற்கையான வளர்ச்சிகள் போன்றவை நீக்கப்பட்டு உண்மையான கோளாறுகள் எங்கேயுள்ளது ? என்பதை ஆராய்ந்ததன் பின்னர் தீர்வுகளை நோக்கி நகர வேண்டும்.
 
இந்த முன்னெடுப்புக்கு தடையான அரசியல் ,நிர்வாக காரணிகள் இனங்காணப்பட்டு அகற்றப்பட வேண்டும்.
              
செயற்திறன் ,வினைத்திறன் அற்றவர்கள் மீது முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வேண்டும்.

பெற்றோர் ,கல்விசார் சமூகத்தினர் இதற்கான பங்களிப்பை எவ்வாறு வழங்கலாம் என்று என இனங்காணப் படல் வேண்டும்.

பங்களிப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள் பற்றி ஆராயப்பட வேண்டும் .
          
முறையான ஒருவருட ,இருவருட ,என்று ஐந்தாண்டு திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

அத்தோடு இவை தனித்தனி முயற்சிகளாக அல்லாது இவை யாவும் ஒருங்கிணைக்கப்படல் வேண்டும்.
   
இவ்வாறு செய்தால் இன்சா அல்லாஹ் எம்மால் இந்த சவாலை எம்மால் வெற்றி கொள்ள முடியும்.

திட்டமிட்டு செயல் படாவிட்டால் அடுத்த வருடமும் இப்படித்தான் ..ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொன்டிரும்போம்.
 
யார் பிழை ? என்று தேடுவதை விடுத்து எங்கே பிழை என்று தேடுவோம் ..தீர்வு கிடைக்கும் .

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு