கிண்ணியாவில் பன்றிக்காய்ச்சல் வருமா?

திருமலை மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆயினும் மற்றுமொரு காய்ச்சல் நாட்டின் பலவிடங்களிலும் சத்தமின்றி  அச்சுறுத்தி வருகின்றமையை மக்கள் கண்டுகொள்வதாக தெரியவில்லை. தாமதிக்கும் போது அதன் பாரதூரமான விளைவுகள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாதிருக்கலாம்.   சில வேளைகளில் அது மோசமான விளைவுகளை தரக்கூடிய காய்ச்சாலாகும் என்பதனால் இதைப் பதிவிடுகின்றேன்.

ஆரம்பத்தில் பன்றிகளிடம் இருந்தும் பின் மனிதர்களிடம் இருந்தும்  'எச்1என்1 - இன்ஃபுளுவன்சா வைரஸ்' கிருமிகள் பரவி, அதனால் ஏற்படும் காய்ச்சல்  பன்றிக்காய்ச்சல் என்று அழைக்கப்படுகின்றது.

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காது உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சைப் பெற வேண்டும். தாமாகவே மருந்துகளை பாவிப்பதை தவிர்த்தல் வேண்டும்.

*பன்றிக்காய்ச்சல் எப்படி பரவுகிறது?*

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும், தும்மும் போதும் வெளியே வரும் எச்சில் மற்றும் சளி துளிகள் மூலம் வைரஸ் கிருமிகள் காற்றில் பரவுகிறது. இந்தக் கிருமிகள் படிந்துள்ள கதவு, கைப்பிடி, நாற்காலி, மேசை, குளிர்சாதன பெட்டி போன்ற பல்வேறு பொருட்களை நாம் தொடும்போது, நம்முடைய கைகளில் கிருமி ஒட்டிக் கொள்கிறது. அதன்பின் நாம் கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடும்போது நமக்கும் கிருமி தொற்று ஏற்படுகிறது. இந்த இடங்களில் பல மணி நேரத்திற்கு வைரஸ் கிருமிகள் உயிருடன் காணப்படும்.

*பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள்*:

காய்ச்சல், சளி, இருமல், தும்மல், தலைவலி, தொண்டை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, மயக்கம், சளியில் ரத்தம், சர்க்கரை நோய் அதிகமாகுதல், விரல்கள் நீல நிறமாக மாறுதல் போன்றவைகள் பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகளாகும்.

பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்கும் முறைகள்:

வீட்டில் இருந்து பள்ளி, அலுவலகம் சென்றவுடன் சோப்பு போட்டு கைகள் மற்றும் கால்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். அதே போல வீடு திரும்பிய உடன் சோப்பு போட்டு கைகள் மற்றும் கால்களை நன்றாக கழுவ வேண்டும்.

எனவே நாம் முன் எச்சரிக்கையாக இருந்தால் மாத்திரமே நமது ஊர்களையும் பாதுகாத்து கொள்ள முடியும்.

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு