இன்ஜில் வேதம் கண்டுபிடிப்பு, வாங்கத் துடிக்கிறார் பாப்பரசர்
வரலாற்று திருப்பம் - இன்ஜில் வேதம் கண்டுபிடிப்பு, வாங்கத் துடிக்கிறார் பாப்பரசர், முஸ்லிம் உலகம் விட்டுக்கொடுக்குமா..?
துருக்கியில் 1500 வருடங்கள் பழமை வாய்ந்த இரகசிய பைபிள் கண்டுடெடுக்கப்பட்டுள்ளது. இந்நூலில் நபி(ஸல்) அவர்களின் வருகைபற்றி முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
இயேசுகடவுள் அல்ல, மாறாக மனிதர் என்றே இன்ஜீல் வேதம் கருதுவதாக இஸ்லாமியநம்பிக்கை கூறுகின்றதுடன்,இப்பழமைவாய்ந்த நூலானது திருத்துவக் கொள்கையை முற்றாக நிராகரிப்பதுடன் நபி(ஸல்) அவர்களின் வருகையைப்பற்றி இயேசு முன்னறிவிப்புசெய்வதாகவும் துருக்கியின் கலாச்சார மற்றும் உல்லாசத்துறை அமைச்சரான எட்துகுரல் குனாய் செய்தி நிறுவனக்கு தெரிவித்துள்ளார்.
1500 வருடங்கள் பழமைவாய்ந்த இவ்வேத நூலானது பர்னாபஸ் கிறிஸ்தவ நூலாக இருக்கும் என நம்பப்படுகின்றதுடன்,முஸ்லிம்களால் இது உண்மையான இன்ஜீல் வேதம் என நம்பப்படுகின்றது. சென்.பர்னாபஸ் சைப்ரஸ் கிறிஸ்தவ தேவாலயத்தின் ஸ்தகபராக பராம்பரிய முறையில் அடையாளப் படுத்தப்படுகின்றார். விலங்குகளின் தோலில் எழுதப்பட்டுள்ள இப்பைபிளானது உண்மையான பதிப்பாக இருக்க முடியமானதுடன், இஸ்லாத்தோடு இது உடன்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கிறிஸ்தவ உலகின் பிரதான தளமான வத்திக்கானினால் 1500வருடங்கள் பழமைவாயந்த பைபிள் நூலை கையளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. துருக்கியின் தலைநகர் அங்காரவில் அமைந்திருக்கும் அங்காரா இன அமைப்பியல் அருங்காட்சியகத்தில் இப்பைளிலானது தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
தங்கத்தைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ள பழமைவாயந்த பைபிளின் பெறுமதி 28மில்லியன் அமெரிக்கடொலருக்கும் (40மில்லியன் லீரா) அதிகமானதாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment